திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னூர் மங்கலம் கிராமத்தில் சுமார் 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி கட்டடம் அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 28-ஆம் தேதி குழந்தைகளின் பயன்பாட்டுக்காக அங்கன்வாடி மையம் திறக்கப்பட்ட நிலையில் 3 மாதங்களிலேயே கட்டட மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்தது.
அங்கன்வாடியில் 30 குழந்தைகள் பயின்று வரும் நிலையில், கட்டடம் சேதமடைந்திருப்பது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மீதும், கட்டிடத் தர ஆய்வு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.