2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக- பாஜக இடையேதான் போட்டி என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற பிராமணர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து மதுரை எஸ்.எஸ்.காலனியில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பிராமண சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், நடிகை கஸ்தூரி விவகாரத்தில் திராவிட சிந்தனை கொண்ட தொலைக்காட்சிகள் அவரது பேச்சை சித்தரித்து வெளியிட்டதாக அர்ஜுன் சம்பத் விமர்சித்தார்.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஐந்து முனை போட்டி நிகழும் என்று கூறிய அவர், இதில் திமுகவிற்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி உருவாகும் என தெரிவித்தார்.