இலங்கை நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழர் பகுதியான வாக்காளர்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல், காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி யாழ்ப்பாணத்தில் 36 சதவீதம் வாக்குகளும், மட்டக்களப்பில் 32 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.
குறிப்பாக தமிழர் பகுதியான கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை 7 மணி முதல் தமது ஜனநாயக கடமையினை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
மாவட்டத்தில் 108 வாக்கு மையங்களில் ஒரு லட்சத்து 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் முதல் முடிவு இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.