டெல்லி மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மகேஷ் கிச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லி மாநகராட்சி மேயர் பதவியானது சுழற்சி முறையில் பொது பிரிவினருக்கும், பட்டியலின் சமூகத்தினருக்கும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொது பிரிவை சேர்ந்த ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பட்டியலின் சமூகத்தினரிடம் மேயர் பதவி ஒப்படைக்கப்பட்டது.
இதையொட்டி, நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மகேஷ் கிச்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாஜக சார்பில் கிஷன் லாலும் போட்டியிட்டனர். இதில் 133 வாக்குகள் பெற்று மகேஷ் கிச்சி வெற்றி பெற்றார்.
130 வாக்குகள் பெற்ற கிஷன் லால், வெறும் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். 3 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. மேயர் தேர்தலை காங்கிரஸ் கவுன்சிலர்கள் 8 பேரும் புறக்கணித்தனர்.