சவூதி அரேபியாவில் ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை விழா நடைபெற்றது.
ரியாத் தமிழ்ச் சங்கம் கடந்த 21 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், நிகழாண்டில் குறும்படம், மைம் எனப்படும் பாவனை நாடகம், பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி, கிராமிய நடனம் என பல்சுவை நிகழ்வுக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்தது.
ரியாத் தாருஸ்ஸலாம் சர்வதேச DPS பள்ளி அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நடிகர் மைம் கோபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள், பொதுநல அமைப்பினர் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வென்று அதிகப் புள்ளிகளை பெற்ற M.M.I.E.S. பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.