பீகாரில் நடைபெற்ற கண்காட்சியில் பிரதமர் மோடியுடன் அரியலூர் தம்பதி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
பழங்குடியின போராளி பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி, பீகார் மாநிலம் ஜமியு நகரில் பழங்குடியின மக்கள் தயாரித்த பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் அரியலூரை சேர்ந்த தர்மதுரை, எழிலரசி தம்பதி வைத்திருந்த கடைக்கு பிரதமர் மோடி சென்றார்.
அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க வேண்டுமென தம்பதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பிரதமர் மோடியே அவர்களது கைப்பேசியை வாங்கி, செல்ஃபி எடுத்துக் கொடுத்தார்.