கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ, 2 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ முல்லைப் பூ 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ சம்பங்கி 600 ரூபாயாகவும் உயர்வை கண்டுள்ளது. பூக்களின் விலை உயர்வு பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.