LIC என்ற தனது திரைப்படத்தின் பெயரை விக்னேஷ் சிவன் ஏன் அனுமதியின்றி பயன்படுத்தினார் என நடிகை நயன்தாராவுக்கு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனுஷ்க்கு நடிகை நயன்தாரா கண்டனம் தெரிவித்த நிலையில் அதற்கு விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், LIC என்ற தலைப்பை பயன்படுத்த, தான் அனுமதி மறுத்த நிலையிலும் அதனை விக்னேஷ் சிவன் ஏன் பயன்படுத்தினார் என கேள்வி எழுப்பியுள்ள அவர், மறுப்பையும் மீறி அதே தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்துகிறார் என்றால் அதற்கு அதிகாரத்தன்மை மட்டுமே காரணம் என தெரிவித்துள்ளார்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இங்கு எதையும் இலவசமாக செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், பிறர் படைப்புகளை மட்டும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
படைப்புலகத்திற்கு மிக மோசமான வழிகாட்டியாக இருப்பதை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் உணர வேண்டும் எனவும் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.