அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்ட துளசி கப்பார்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பார்டு, ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகி குடியரசுக் கட்சியில் சேர்ந்தார்.
21 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையிலும் பணியாற்றியுள்ளார். டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கும் உதவியாக இருந்தார். அவரை அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.