சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரயில் கோட்டத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால் கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வசதிக்காக 45 நிமிட இடைவெளியில் ஒரு சிறப்பு ரயில் மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், மாலை 5 மணிக்கு மேலாக ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க தெற்கு ரயில்வே சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.