ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்வதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு வடிவமைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினை பொருட்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் ஜவுளி உற்பத்தி வரும் 2030ஆம் ஆண்டு 350 பில்லியன் டாலராக உயரும் என்று கூறினார். தற்போது 4 கோடியே 6 லட்சமாக உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டு 6 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.