இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஊடகத் தலைவர் கொல்லப்பட்டார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஊடகத் தலைவரான முகமது அஃபிஃப் ( MOHAMMAD AFIF) கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் லெபனானில் டயர் என்ற நகரில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.