ஆராய்ச்சி மாணவர்களை சொந்த வேலைகளில் ஈடுபடுத்தும் வழிகாட்டி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்ற போது தாங்கள் மரியாதை குறைவாக நடத்தப்படுவதாக ஆளுநரிடம் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், ஆராய்ச்சி மாணவர்களை பல்கலைக்கழகத்தின் வழிகாட்டு ஆசிரியர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள உயர்கல்வித்துறை,ஆராய்ச்சி மாணவர்களை சொந்த வேலைகளில் ஈடுபடுத்தும் வழிகாட்டி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதை பல்கலைக்கழக நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.