கடனில் இருந்து மீளுமா இலங்கை? என்ன செய்ய போகிறார் அதிபர் அநுர திஸாநாயக? - சிறப்பு கட்டுரை!
Aug 15, 2025, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடனில் இருந்து மீளுமா இலங்கை? என்ன செய்ய போகிறார் அதிபர் அநுர திஸாநாயக? – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

225 உறுப்பினர்களைக் கொண்டஇலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் அநுர திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இருக்கும் அதிபர் அநுர திஸாநாயக்கவுக்கு இந்த வெற்றி, மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்காமல் அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்வதற்கும் அதிகாரம் அளித்திருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1948 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இலங்கையில் பாரம்பரிய அரசியல் கட்சிகளே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தன. கடந்த செப்டம்பரில் முதன்முறையாக இந்தப் போக்கை உடைத்து அநுர திஸாநாயக்க அதிபராக வெற்றி பெற்றார். அதிபராக பதவியேற்ற உடன் நாடாளுமன்றத்தையும் அவர் கலைத்தார்.

இதனை தொடர்ந்து,நாட்டின் 10 வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில், 196 இடங்கள் இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ், கட்சிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்கள் பெறும் வாக்குகளின் விகிதத்திற்கேற்ப ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 29 இடங்கள், தேசியப் பட்டியல் இடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த 29 இடங்கள்,நாடு முழுவதும் பெறும் மொத்த வாக்குகளின் விகிதத்தின்படி கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே பெற்றிருந்த அதிபர் அனுர திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இந்த முறை தனிப்பெரும்பான்மையை காட்டிலும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, தேசிய மக்கள் சக்தி ஒட்டுமொத்தமாக 61.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. சஜித் பிரேமதாசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 17.7 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி வெறும் 4.5 சதவீத வாக்குகளுடன் 3வது இடத்தைப் பெற்றுள்ளது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன முன்னணி 3.1 சதவீத வாக்குகளுடன் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2.3 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

கொரொனா தொற்றுநோய் காலத்தில்,இலங்கையில் பொருளாதார நெருக்கடி உருவானது. வெளிநாட்டில் பணிபுரியும் உறவுகளிடம் இருந்து பணம் வருவதும் நின்றது. முறையற்ற நிர்வாகத்தின் விளைவாக மக்கள் வாழ்வாதாரம் இழந்தனர்.

தொடர்ந்து 2019 உள்நாட்டு போர் காரணமாக முக்கியமான சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்தது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்தது, இறக்குமதிக்கு பணம் செலுத்தவோ அல்லது அதன் நாணயமான ரூபாயை பாதுகாக்கவோ இலங்கை அரசால் முடியவில்லை.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, நாட்டில் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மேலும், அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக கட்டாயப்படுத்தியது. அவருக்குப் பதிலாக ரணில் விக்கிரமசிங்க அதிபரானார்.

ரணில் விக்கிரம சிங்க ஆட்சி காலத்தில் பொருளாதாரம் சீரானது. பணவீக்கம் குறைக்கப்பட்டது. இலங்கை ரூபாய் மதிப்பு வலுப்பெற்றது. கூடுதலாக அந்நிய செலவாணி இருப்பு அதிகரித்தது.

ஆனாலும் சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகள் நடைமுறைபடுத்தப்பட்டன. அதன் விளைவாக மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்தன. தொழில்துறை மற்றும் வணிகத்துறை மீது கடுமையான புதிய வருமான வரிகள் சுமத்தப்பட்டன. இதனால், பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்தது. அதிபர் தேர்தலில் ரணில் தோல்வியடைந்தார்.

ஊழலில் செய்த முந்தைய மக்கள் பிரதிநிதிகளைத் தண்டிப்பதாகவும், திருடப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களை மீட்பதாகவும் அநுர திஸாநாயக்கவின் வாக்குறுதி மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.அதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் இந்த வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.

ஏற்கெனவே ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.மக்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக அநுர திஸாநாயக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் அதேவேளையில், சர்வதேச கடன் பொறியில் இருந்து இலங்கையை விடுபட முடியுமா என்பது தான் அநுர திஸாநாயக்கவுக்கு முன் இருக்கும் ஒரே கேள்வி?……

Tags: sri lankaPresident Anura DissanayakeNational People's coalitionSri Lankan Parliamentsrilanka parliment electionsrilnaka loans
ShareTweetSendShare
Previous Post

திருச்சி திருச்செந்தூறை சந்திரசேகர சுவாமி கோயிலில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தரிசனம்!

Next Post

ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies