மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் வாக்குப்பதிவிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரவு தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மகாராஷ்டிராவில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். இதேபோல காங்கிரஸ் தரப்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.