ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டி ஹாஸ்டல் வார்டன் தண்டனை கொடுத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கேஜிபிவி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர், பள்ளிக்கு தாமதமாக சென்றுள்ளனர்.
இதையறிந்த ஹாஸ்டல் வார்டன் பிரசன்ன குமாரி, பள்ளிக்கு தாமதமாக சென்ற 15 மாணவிகளை 2 மணி நேரம் வெளியே நிற்க வைத்து, அவர்களின் தலைமுடியை வெட்டியுள்ளார். இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக் கூடாதென்றும் மாணவிகளை அவர் மிரட்டியிருக்கிறார்.
எனவே, ஹாஸ்டல் வார்டனை பணியிடை நீக்கம் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.