தஞ்சையில் பெண் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனை பகுதியை சேர்ந்த ரமணி, மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ரமணியும் அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் காதலை ஏற்க ரமணியின் பெற்றோர் மறுத்ததால், மதன்குமார் உடனான காதலை ரமணி கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், ரமணி பணியாற்றும் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு ஓய்வறையில் இருந்த ரமணியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த ரமணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதன்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.