அதிர்ச்சியூட்டும் தகவல் - செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் அழிந்து விட்டதா? சிறப்பு கட்டுரை!
May 18, 2025, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிர்ச்சியூட்டும் தகவல் – செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் அழிந்து விட்டதா? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் வைக்கிங் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் இருந்ததாக அறியப்படும் உயிர்களை எதிர்பாராமல் அழித்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலை, வானியல் விஞ்ஞானியான ஷூல்ஸ்-மகுச்சின் ( Schulze-Makuch ) தெரிவித்துள்ளார். நாசாவின் ஆய்வு எப்படி, செவ்வாய் கிரகத்தின் உயிர்களை அழித்திருக்கும் ? வானியல் விஞ்ஞானி ஷூல்ஸ்-மகுச்சின் ( Schulze-Makuch ) கூறும் காரணங்கள் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

செவ்வாய் கிரகம் ஒரு தரிசு நிலமா? வளமான நிலமா ? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா ? இல்லையா ? செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா ? இல்லையா ? இந்த கேள்விகளுக்கான விடைகளைக் கண்டுபிடிக்க நீண்ட ஆண்டுகளாகவே சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, 1970ம் ஆண்டு முதன்முறையாக, செவ்வாய் கிரகத்தை ஆராய, விண்கலத்தை அனுப்பியது அமெரிக்கா. 1975 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் முதலாவது வைக்கிங் விண்கலம் 1976 ஆம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வைக்கிங் 1 மற்றும் வைக்கிங் 2 ஆகிய இரண்டு லேண்டர்களைத் தரை இறக்கியது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா என்பதைக் கண்டறிவது இதன் முக்கியமான நோக்கமாகும்.

செவ்வாய் கிரகத்தின் மண்ணின் மாதிரிகளை சேகரித்து, பரிசிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தொடர்ச்சியான உயிரியல் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. ஆரம்பத்தில் இந்த ஆய்வுகள் செவ்வாய் கிரகத்தில், உயிர் இருந்ததற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டின.

காலப்போக்கில், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் வைக்கிங் முடிவுகள் செவ்வாய் கிரகத்தின் உயிரினங்கள் இருந்ததற்கான உறுதியான எந்த ஆதாரங்களை வழங்கவில்லை என்று முடிவு செய்தனர்.

இந்நிலையில், வானியல் விஞ்ஞானி ஷூல்ஸ்-மகுச்சின், வைக்கிங் லேண்டர்களில் இருந்து வந்த நீர், செவ்வாய் கிரக உயிரினங்களை அழித்திருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

பொதுவாகவே மற்ற கிரகங்களில் உள்ள உயிர்களைக் கண்டறிவதற்காக, லேண்டரில் உள்ள தண்ணீரைத் தான் விஞ்ஞானிகள் பயன்படுத்தி வந்தனர். நீண்ட காலமாகவே தண்ணீர் உயிர் வாழ்வதற்கான ஆதாரம் என்று கருதப்பட்டு வருகிறது. இந்த அடிப்படைக்குச் சவால் செய்திருக்கிறது ஷூல்ஸ்-மகுச்சின் கருத்து.

வைக்கிங் லேண்டர்கள் செவ்வாய் கிரகத்தில் சோதனைகளை நடத்தியபோது, கவனக்குறைவாக செவ்வாய் நிலப்பரப்பில் அதிகப்படியான திரவ நீரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அதனால்,செவ்வாய் கிரகத்தின் நுண்ணுயிரிகளுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும் என்றும், Schulze-Makuch கூறியிருக்கிறார்.

மேலும், வருங்காலத்தில், செவ்வாய் கிரக ஆய்வுகளில், தண்ணீர் மட்டும் பயன்படுத்தாமல், காற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சக்கூடிய ஹைக்ரோஸ்கோபிக் உப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற பரிந்துரை செய்திருக்கிறார்.

கிரகத்தின் சுற்று சூழலுக்கு ஏற்றவாறு புதிய உத்திகளை ஆய்வுகளில் இணைக்க வேண்டும் என்று கூறியிருக்கும் Schulze-Makuch , செவ்வாய் கிரகத்தில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

ஷூல்ஸ்-மகுச்சின் கருத்தைப் பின்பற்றி, விண்வெளி விஞ்ஞானிகள், பல ஆண்டுகளாக இருந்து வந்த விண்வெளி ஆய்வுமுறைகள் மற்றும் அனுமானங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளனர்.

 

Tags: International scientistmarsAstronomer Schulze-MakuchNASA's Viking spacecraft
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சி – மாணவிகளை வேலை வாங்கிய அரசு பள்ளி நிர்வாகம்!

Next Post

காரைக்காலில் சுமார் 8 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

Related News

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசு!

திருச்சி : அருந்ததியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுக்கூட்டம்!

சென்னையில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு : முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்!

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

கனரக வாகன ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கும் வனத்துறை அதிகாரி!

Load More

அண்மைச் செய்திகள்

பங்க் ஊழியரை கடுமையாக தாக்கிய வாடிக்கையாளர்!

பொள்ளாச்சி : தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து 2 பேர் பலி!

8 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட கோயில் தேர் சக்கரங்கள்!

ஈரோடு : மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்!

மாமன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது : நடிகர் சூரி

கும்பகோணம் அருகே சூறை காற்றுடன் பெய்த கனமழை : வாழை மரங்கள் சாய்ந்து சேதம்!

பாகிஸ்தானில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் : அண்ணாமலை

ED ரெய்டால் முதலமைச்சருக்கு பயம் : இபிஎஸ்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : தமிழகம் முழுவதும் பாஜக மூவர்ண கொடி பேரணி!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies