சென்னையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 24வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் 437 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
44 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர். பட்டப்படிப்பில் சிறந்து விளங்கிய 127 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கினார்.