மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மது போதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு, போக்குவரத்து போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தஞ்சாவூரில் இருந்து சீர்காழி நோக்கி சென்ற தனியார் பேருந்து, சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே நுழையும் போது அரசு பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பான புகாரின் பேரில்,மது போதை சோதனைக் கருவியை கொண்டு தனியார் பேருந்து ஓட்டுநர் தீனதயாளனை போலீசார் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில், அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து ஓட்டுநர் தீனதயாளனுக்கு போக்குவரத்து போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்