மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஒத்தக்கடையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த சித்திக் ராஜா என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சித்திக் ராஜா தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், அதற்கு லாவண்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சித்திக் ராஜா, ஜெராக்ஸ் கடையில் இருந்த லாவண்யாவை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த லாவண்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.