இந்தியாவில் அரிய மொழி பேசுபவர்களும் படிக்கும் வகையில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்யவுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறளை மொழிபெயர்த்து வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் தகவலளித்துள்ளனர். நீலகிரி மாவட்ட பழங்குடிகளின் 6 மொழிகளிலும் திருக்குறள் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவின் 20 அரிய மொழிகளில் வெளியாகும் முதல் மொழிபெயர்ப்பு நூலாக திருக்குறள் அமைந்துள்ளது.
மேலும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அரிய மொழிகளின் திருக்குறள் நூல்களை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.