சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பில்லை என கனடா அரசு ஒப்புக்கொண்டது.
கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டில் கொலை செய்யப்பட்டார்.
அவரது கொலையில் இந்திய உளவாளிகளுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில், அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்ட சூழலில், நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலை தொடர்புபடுத்த போதிய ஆவணங்கள் இல்லை என கனடா அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவை ஊகத்தில் அடிப்படையில்தான் தொடர்புபடுத்தியதாகவும், அது மிகவும் தவறு என்றும் கனடா ஒப்புக்கொண்டுள்ளது.