மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியான மகாயுதி அணியின் இமாலய வெற்றிக்கு, ஆர்.எஸ்.எஸ் முக்கிய பங்காற்றியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தலைமையிலான மகாயுதி அணி 225-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதன் மூலம் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் இமாலய வெற்றியை நோக்கி பாஜக கூட்டணி பயணித்து வருகிறது.
இந்நிலையில், பாஜக-வின் இமாலய வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ் முக்கிய பாங்காற்றியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கருத்துக்கணிப்புகளை பின்னுக்கு தள்ளி பாஜக வெற்றி வாகை சூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் களப்பணியே காரணம் எனவும், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் ஆர்.எஸ்.எஸ் GAME CHANGER ஆக மாறியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.