ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நாளை நடைபெறும் நிலையில் அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் 110 கோடியே 5 லட்சம் ரூபாய் ஏல தொகை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நாளை மற்றும் நாளை மறுநாள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு ஆயிரத்து 574 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், இறுதி செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் 574 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வீரர்களாக, ஜோஸ் பட்லர், ஷ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்டோர் உள்ளனர். இந்நிலையில், மெகா ஏலத்திற்காக அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 110 கோடியே 5 லட்சம் ரூபாயும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 41 கோடியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.