தங்கள் நாட்டில் நுழைந்தால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வோம் என இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
இஸ்ரேல்- பாலஸ்தின் இடையே வெகு காலமாக போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனில் இதுவரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டு முன்னாள் ராணுவ அமைச்சர் கேலண்ட் ஆகியோருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், தங்கள் நாட்டுக்குள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நுழைந்தால் கைது செய்வோம் என இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளனர்.