உத்தரப்பிரதேசத்தில் மசூதி இடத்தில் கோயில் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆய்வுக்காக சென்ற அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் சாம்பால் பகுதியில் உள்ள மசூதி இடத்தில் கோயில் இருந்ததாக வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு குறித்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதனைதொடர்ந்து ஆய்வுக்காக அதிகாரிகள் சென்ற போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகைக் குண்டுகள் வீசினர். இதனை ஒட்டி பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.