தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளன்று நடத்தப்பட உள்ள பட்டய கணக்கர் தேர்வை ரத்து செய்யுமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்திருந்தார். மேலும், திமுக நிர்வாகி ஒருவர் எக்ஸ் வலைதள பக்கத்தில், மத்திய பாஜக அரசு தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.
இதனை மேற்கோள் காட்டி பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா, சி.ஏ தேர்வுகளுக்கான தேதிகள் ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர நிதியமைச்சகத்தால் அல்ல என்று பதில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், எஸ்.ஜி சூர்யாவின் பதிவை மேற்கோள் காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதில் பார்த்தாலும், எப்பொழுது பார்த்தாலும் தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.