ப்ரெஷ் உணவில்லாமல் தவிப்பு : விண்வெளியில் உணவு சவாலை சமாளிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - சிறப்பு கட்டுரை!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ப்ரெஷ் உணவில்லாமல் தவிப்பு : விண்வெளியில் உணவு சவாலை சமாளிக்கும் சுனிதா வில்லியம்ஸ் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 25, 2024, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 160 நாட்களுக்கும் மேலாக சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் பிரஷ்ஷான உணவு கிடைக்காததால் பழைய உணவை சூடு பண்ணி சாப்பிடுகிறார்கள். விண்வெளியில் உணவு சவாலை எப்படி அவர்கள் சமாளிக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி சென்றார். அவருடன் அமெரிக்காவைச் சேர்ந்த பட்ச் வில்மோரும் சென்றார். இருவரும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்கள் பணிகளை முடித்தபின் பூமிக்கு திரும்புவர் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னையால், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனால், இருவரும், விண்வெளி நிலையத்தில் தங்கள் ஆராய்ச்சி பணிகளைத் தொடர்வார்கள் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்குத் திரும்புவார்கள் என்றும் நாசா அறிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம், விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்ய அடிக்கடி வந்து போகும் ஒரு வீடாகும். விண்வெளி நிலையத்தில் ஐந்து படுக்கையறைகள் உள்ளன. இதில் ஆறு பேர் கொண்ட குழுவினர் தங்க முடியும். மேலும் இந்த விண்வெளி நிலையத்தில், பார்வையாளர்களுக்கு என்று ஒரு தனி அறையும் உள்ளது.

பாதுகாப்பான இடமாக உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில்,விண்வெளி வீரர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்கவும் வசதியுள்ளது.

பொதுவாக, விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்கள், பழைய கால வழக்கப்படி உறைந்த உணவுகளையே சாப்பிடுவார்கள். சேமித்து வைக்கப் பட்ட பழ வகைகளைச் சாப்பிடுவார்கள். சராசரியாக ஒரு மூன்று மாதங்கள் வரை பழங்கள் கெடாமல் இருக்கும். மேலும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை மீண்டும் விண்வெளி நிலையத்துக்குள் கொண்டு வர, மூன்று மாதங்கள் வரை ஆகும் என்கிறார்கள் விண்வெளி வல்லுநர்கள்.

இந்நிலையில், விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் , புட்ச் வில்மோரும், உணவு தானியங்கள், பால், வறுத்த கோழி மற்றும் இறால் காக்டெய்ல், பீட்சா என சுவையான உணவுகளையே சாப்பிடுகின்றனர். பூமியில் கவனமாக தயாரிக்கப்பட்ட இந்த உணவுகள் அனைத்தும் விண்வெளி நிலையத்தை அடைந்தவுடன் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகிறார்கள்.

மேலும் தங்கள் சிறுநீர் மற்றும் வியர்வையை குடிக்கக்கூடிய தண்ணீராக மாற்றிக் கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. இந்த விண்வெளி வீரர்களின் ஊட்டச் சத்து அளவை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும், உறைந்த மற்றும் உலர்ந்த உணவு பொருட்களையே நம்பியுள்ளனர். இருவரும் ஒரு நாளைக்கு 1.7 கிலோ உணவை உட்கொள்வதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது. இது அவர்களின் குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சுனிதா வில்லியம்ஸின் உடல் எடை குறைந்துள்ளது என்ற தகவல் ஊடகங்களில் பரவியது. தான் உடல் எடையை குறைப்பதாக வரும் செய்திகள் எல்லாம் வதந்திகளே என்று வீடியோ வெளியிட்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், மைக்ரோ கிராவிட்டி காரணமாக , தலை மற்றும் உடல் பகுதிகள் சற்று பெரியதாக தோன்றுகிறது என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

இந்த சூழலில் , சுனிதா வில்லியம்ஸ் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்வெளியில் உறங்கும் முறைகளைக் கண்காணிப்பதற்கான அற்புதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

விண்வெளிப் பயணம் என்பது தூக்கம்-விழிப்பு சுழற்சிகளை சீர்குலைப்பதாக அறியப் படுகிறது. இந்த விளைவுகளை புரிந்துகொள்வதும், குறைப்பதும் விண்வெளி வீரர் ஆரோக்கியம் மற்றும் பணி வெற்றிக்கு முக்கியமானதாகும்.

விண்வெளியில் உள்ள விஞ்ஞானிகளின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து நாசா கண்காணித்து வருகிறது. எனினும், விண்வெளியில் உணவு சவாலை நாசா எவ்வாறு சமாளிக்கும் என்ற கேள்வி மட்டும் மிஞ்சி இருக்கிறது.

Tags: NASA astronauts Sunita Williamsfood issueUnited StatesButch WilmoreInternational Space Station
Share
Tweet
SendShare
Previous Post

GLOBAL SOUTH-க்கு ஆதரவு : சீனாவிற்கு எதிரான இந்தியாவின் வியூகம் – சிறப்பு கட்டுரை!

Next Post

தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது !- நிர்மலா சீதாரமன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies