டெல்லியில் யமுனை நதி முழுவதும் நச்சு நுரையாக காட்சியளிக்கிறது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் இந்த நச்சு நுரை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆற்றில் மாசு அளவு அதிகரித்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றின் நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.