உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலில் போலீஸார், பொதுமக்கள் இடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
சம்பாலில் இருந்த ஹரி ஹர கோயிலை இடித்து முகலாய மன்னர் பாபர், மசூதி கட்டியதாகவும், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டக்கோரியும் விஷ்ணு சங்கர் என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி மசூதியில் ஆய்வு பணிக்கு அதிகாரிகள் சென்றபோது அப்பகுதி மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை எறிந்ததால், போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்தக் களேபரத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.