மேட்டுப்பாளையத்தில் தனியார் பிட்னஸ் சங்கம் நடத்திய மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தனியார் பிட்னஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது.
இதில் 50 முதல் 75 கிலோ எடைப்பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு தங்கள் கட்டுமஸ்தான உடல்வாகை நடுவர்களிடம் காட்டி அசத்தினர்.
ஒவ்வொரு எடைப்பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். இந்த போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் விரைவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















