வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒடியா சமாஜ் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒடிஸா பார்பா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அரங்கில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டாலில், தேநீரை ஆர்வமுடன் வாங்கி பிரதமர் மோடி அருந்தினார்.
தொடர்ந்து ஒடிஸா நடன குழுவினரின் பாரம்பரிய நடனத்தை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், ஆனால் தனது அரசு வடகிழக்கை வளர்ச்சியின் இயந்திரமாக கருதுவதாகவும் தெரிவித்தார். மேலும், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தாம் முக்கியத்துவம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.