தலைமைச் செயலக ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுவதைப்போல் மாநிலம் முழுவதும் பணியாற்றும் அரசுத்துறை ஓட்டுநர்களுக்கும் கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அன்பழகன், கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், 10 முதல் 20 ஆண்டுகள் வரை அரசுத்துறைகளில் ஓட்டுனராக பணியாற்றி தேர்வுநிலை, சிறப்புநிலை பெற்ற ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.