பெண்கள் மற்றும் முதியோர் கட்டாயம் “காவலன் ஆப் ” பதிவிறக்கம் செய்ய வேண்டும் என சேலம் மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு பெண்கள் மற்றும் முதியோருக்கு ஆபத்து நேரிடும் சமயத்தில் உதவிசெய்யும் விதமாக காவல்துறை சார்பில் காவலன் செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த செயலியை பெண்கள் கட்டாயம் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமென சேலம் மாநகர காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகளில் நின்றுகொண்டு பெண்கள் மற்றும் முதியோரிடம் செயலி குறித்து விளக்கி வருகின்றனர்.