நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை மாத சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலில் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்நிலையில் கார்த்திகை மாதத்தை ஒட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.