சி.எஸ்.கே. ரசிகர்கள் முன்பு விளையாட மிகவும் ஆர்வமாக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2025 ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அஸ்வின், சி.எஸ்.கே. ரசிகர்கள் முன்பு 10 ஆண்டுகளுக்கு பிறகு விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமக்கு பலவற்றை கற்றுத்தந்த அணிக்காக மீண்டும் களமிறங்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.