சேலம் மாவட்டம், கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலைய தேர் திருவிழாவில், இருதரப்பினரிடையே வெடித்த மோதலால் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது.
கிறிஸ்து அரசர் ஆலைய தேர் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. நேற்று தேர் திருவிழா நடைபெறவிருந்த நிலையில், மாலை திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கிறிஸ்து அரசர், புனித நிக்கல் மற்றும் ஆரோக்கியமாதா சிலைகளை வாகனங்களில் ஏற்றி, ஊர்வலகமாக எடுத்துச் செல்ல முற்பட்டபோது இருதரப்பினரிடையே வாக்குவாதம் வெடித்து கைகலப்பானது. மோதல் காரணமாக தேர் திருவிழா நடத்த கெங்கவல்லி போலீசார் தடை விதித்தனர்.