சிவகங்கை மாவட்டத்தில் 103 சவரன் கோயில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் வட்டிக்கடை உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே கருவியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் தனது வீட்டில் வைத்திருந்த 103 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டதாக பள்ளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் நகைகளை திருடிய எதிர்வீட்டில் வசிக்கும் சுரேஷ் என்ற இளைஞரையும், அவரிடம் இருந்து நகைகளை வாங்கிய வட்டிக்கடை உரிமையாளர் சோமசுந்தரம் என்பவரையும் கைது செய்தனர். அவர்கள் திருடிய நகைகள் மற்றும் ரொக்க பணத்தையும் போலீசார் மீட்டனர்.