தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தின்போது இளைஞர் ஒருவர், பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர்.
விசாரணையில் அவர் மாப்பிள்ளை நாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பதும், உறவினர் கலியமூர்த்தி என்பவர் 20 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு திரும்ப தராமல் இழுத்தடிப்பு செய்ததால் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.