அனைவரும் தம் மீது காட்டிய அளவற்ற அன்புக்கு நன்றி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “இன்றைய தினம், தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரையும் நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. ஒரு சகோதரனைப் போல அனைவரும் என் மீது காட்டிய அளவற்ற அன்பு, என்னை மிகவும் நெகிழ்ச்சியுறச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் @tarunchughbjp, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் @nalinkateel உள்ளிட்டோரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.