கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தோடிய ஓடையில் ஆபத்தான முறையில் இறந்தவரின் சடலத்தை எடுத்துச்சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
சங்கராபுரம் அருகே பொய்குணம் கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் வரஞ்சம் என்ற ஓடை உள்ளது. இதன் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்தது.
இந்நிலையில், பொய்குணம் கிராமத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை அவரது உறவினர்கள் வெள்ளம் பெருக்கெடுத்தோடிய ஓடையை ஆபத்தான முறையில் கடந்து மறுகரைக்கு எடுத்து சென்றனர்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.