இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் உயரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரதபானி புலிகள் காப்பகம், 57-வது புலிகள் காப்பகமாக சேர்த்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சரான பூபேந்தர் யாதவ் தெரிவித்திருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பதிவில், இயற்கையை பராமரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இது ஒரு அற்புதமான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டு முயற்சிகளுக்கு நன்றி எனவும், இந்தியாவின் புலிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருவதால், வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.