மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை மகாராஷ்டிரா முதல்வராக பதவி அவர் ஏற்கிறார்.
மகாராஷ்டிரா பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் பாஜக மேலிட பொறுப்பாளர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளை மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.