இந்திய கடற்படை தினத்தின் 53-வது ஆண்டு விழாவையொட்டி 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூர இருசக்கர வாகன பேரணி துவங்கியது.
கடந்த 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது, ஆபரேஷன் ட்ரைடென் வெற்றியடைந்ததன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்திய கடற்படையின் 53வது ஆண்டு விழாவையொட்டி, சென்னை போர் நினைவு சின்னத்தில் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உயிர்நீத்த வீரர்களுக்கு கடற்படையினர் மரியாதை செலுத்தினர்.