மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், விருத்தாச்சலத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடு இடியும் நிலையில் உள்ளது.
கனமழையால் கள்ளக்குறிச்சி கோமுகி அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 600 கன அடி நீர் திறந்து விடப்படும் நிலையில், மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விருத்தாச்சலத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள செந்தில் என்பவரின் வீடு முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. வீடு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் உள்ளதால், அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.