வரத்து குறைந்ததால் திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் அண்ணா பூ சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் திண்டுக்கல் மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
மேலும் முகூர்த்த நாள் நெருங்கி வருவதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 3 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லைப்பூ ஆயிரத்து 500 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.