PSLV C59 விண்கலத்தின் பயணம் வெற்றியடைய வேண்டி ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் உள்ள செங்காளம்மன் கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிபாடு நடத்தினார்.
இஸ்ரோவின் PSLV C59 விண்கலம் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதை முன்னிட்டு சூளூர்பேட்டையில் உள்ள செங்காளம்மன் கோயிலுக்கு வருகை தந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்கலத்தின் பயணம் வெற்றியடைய வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து செங்காளம்மனை வழிபட்ட பின் அவருக்கு கோயிலின் வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.