திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால் நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதட்டூர் பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை தரைப்பாலம் நீரில் மூழ்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், ஆபத்தை உணராமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தரைப்பாலத்தில் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.