இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது! : கரு.நாகராஜன்
Sep 4, 2025, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது! : கரு.நாகராஜன்

Web Desk by Web Desk
Dec 4, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூரில் இந்து மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, வங்கதேச இந்து மீட்பு குழு சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பாஜகவினர் பங்கேற்று வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக் கோரி முழக்கமிட்டனர்.

போராட்டத்தின்போது பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது என தெரிவித்தார். வங்கதேசத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் இந்துக்கள் தான் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வங்கதேசத்திலுள்ள இந்துக்களுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.

வங்கதேச இந்துக்களை பாதுகாக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளரும், பாஜக பிரமுகருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு யாரும் துணை நிற்காதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்துக்களுக்காக கைது செய்யப்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

போராட்டத்தில் வேலூர் இப்ராஹிம் பங்கெடுத்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், இந்துக்களுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை திமுக அரசு கைது செய்வது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

இதனையடுத்து, அங்கு கூடியிருந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டத்தை கூட நடத்த முடியாத சூழல் தமிழகத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார். இந்துக்களுக்கு எதிரான அரசாக திமுக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: tn bjpWithout IndiaBangladesh would not have come into being! : Karu. Nagarajan
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி : சாலையை மூழ்கடித்தபடி சென்ற வெள்ளம்!

Next Post

இரட்டை இலை சின்னம்! : தேர்தல் ஆணையத்துக்கு கெடு

Related News

வரலாறு காணாத வரி குறைப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் – மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி!

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய கனிமங்களின் மறுசுழற்சி ஊக்குவிப்புக்கு ஊக்கத்தொகை திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பெண்கள், நடுத்தர மக்கள், சிறு குறு தொழிலாளர்களுக்கு எஸ்டி வரி சீர்திருத்தம் பயனளிக்கும் – பிரதமர் மோடி உறுதி!

பால், ரொட்டி, சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் – செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என நிர்மலா சீதாராமன் விளக்கம்!

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

நவீன நாஜிசத்திற்கு எதிராக கூட்டணி : புதினுடன் கரம்கோர்த்த வடகொரியாவின் கிம் ஜாங் உன்!

பாக். பிரதமருக்கு குடைச்சல் கொடுக்கும் ஹெட்செட் : மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies